செய்திகள்

யாழ். குடாநாட்டின் பல இடங்களில் நேற்றும் மழை: சில இடங்களில் கடும் மழை (படங்கள்)

யாழ்.குடாநாட்டின் வலிகாமத்தின் சிலவிடங்களில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (04.5.2015) பகல் திடீரென வீசிய மினி சூறாவளியுடன் கூடிய மழை பொழிந்த நிலையில் நேற்றும் மழை பெய்துள்ளது.

இந்த நிலையில் சிலவிடங்களில் கடும் மழையுடனான காலநிலையும் காணப்பட்டது.

நேற்றுப் பிற்பகல் 03.15 மணிக்கு ஆரம்பித்த மழை வீழ்ச்சி சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்தது.மழை காரணமாக யாழ்.நல்லூர் ஆலயச் சூழலில் வெள்ளம் தேங்கிக் காணப்பட்டதுடன் பல வீதிகளிலும் வெள்ளம் தேங்கிக் காணப்பட்டது.மழை காரணமாகப் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

கடந்த பல நாட்களாக யாழ்.குடாநாட்டில் கடும் வெப்பமான காலநிலை நிலவி வந்த நிலையில் மழை காரணமாகப் பொதுமக்கள் சற்று ஆறுதலடைந்துள்ளனர்.

இதேவேளை,இன்றைய தினம் யாழ்.குடாநாட்டின் பலவிடங்களிலும் இடையிடையே மப்பும் மந்தாரமுமான காலநிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ் நகர் நிரூபர்-

rain jaffna (1)

rain jaffna (2)

rain jaffna (3)

rain jaffna (4)

rain jaffna (5)

rain jaffna (6)

rain jaffna (7)