செய்திகள்

யாழ். குடிநீர்ப் பிரச்சினை! மனிதாபிமானமான முறையில் கையாளுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுரை

யாழ்ப்பாணம் வலிகாமம் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைத் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுலா அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

குடிநீர் பிரச்சினை தொடர்பில் வட மாகாண ஆளுனர் மற்றும் முதலமைச்சருடன் உரிய முறையில் கலந்துரையாடி தீர்வு மேற்கொள்வதோடு இப்பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை வடக்கில் சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்கும் மணல் அகழ்வுகள் குறித்தும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் கலந்துரையாடியுள்ளார்.