செய்திகள்

யாழ். கைதடி இளைஞன் மலையக நீர்த்தேக்கமொன்றில் மூழ்கி பலி (படங்கள்)

மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனா்.

இச் சம்பவம் இன்று (16.04.2015) வியாழக்கிழமை முற்பகல் இடம் பெற்றுள்ளது.

மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் நண்பா் வீட்டிற்கு வந்த இவா் 16.04.2015 இன்று காலை வேளையில் தனது நண்பரோடு நீராடச் சென்றுள்ளார்.

அதன் பின் தனது நண்பன் நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென காணாமல் போயுள்ளதாக அவரின் நண்பன் மஸ்கெலியா பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

அதன் பின் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் கடற்படையினா் நீர்தேக்கத்தில் காணாமல் போனவரை தேடும் பணியில் ஈடுப்பட்ட போது சுமார் 5 மணித்தியாலயங்களின் பின் சடலத்தை நீர்தேக்கத்திலிருந்து மீட்டுள்ளனா்.

இவ்வாறு உயிரிழந்தவா் யாழ்ப்பாணம் கைதடி பகுதியை சேர்ந்த 19 வயதுடைய அருளாநந்தன் டிலோஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனா்.

குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

குறித்த இளைஞன் கடந்த 12 திகதி யாழ்ப்பாணத்திலிருந்து மஸ்கெலியா பகுதியில் நண்பரின் வீட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.

DSC08442

DSC08447

DSC08457