யாழ்.கோண்டாவில் டிப்போவுக்கு அருகில் இன்று இடம்பெற்ற விபத்தில் செய்தியாளரை அச்சுறுத்திய பொலிஸாரும் படமெடுத்த சி.ஜ.டி யினரும் (படங்கள், (வீடியோ) )
யாழ்.கோண்டாவில் டிப்போவுக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் துடிதுடித்துப் பலியாகியிருந்தார்.தனியார் பிஸ்கட் நிறுவனத்துக்குச் சொந்தமான கன்ரர் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டையிழந்து பலாலி வீதியின் ஓரமாகக் கதைத்துக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியதாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.குறித்த வாகனத்தைச் செலுத்தியவர் சிங்கள பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவராகவுள்ள நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதியில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த யாழ்.தினக்குரல் செய்தியாளரை கோப்பாய்ப் பொலிஸாரொருவர் படமெடுக்க வேண்டாமெனவும்,அப் பகுதியை விட்டுச் செல்லுமாறும் பொல்லைக் காட்டிக் கடும் தொனியில் அச்சுறுத்தியுள்ளார்.
இதன் பின்னர் படமெடுத்த செய்தியாளரை குறித்த பொலிஸ் உறுப்பினரும் அங்கு நின்ற சி.ஜ.டி ஓருவரும் கைத் தொலைபேசியில் படமெடுத்தனர். குறித்த விபத்தையடுத்து விபத்துக்குக் காரணமான வாகனத்தை எடுக்க விடாது தடுத்த பொதுமக்களை பொலிஸாரும், சிவில் உடையில் வந்த பொலிஸாரும்,சி.ஜ.டியினரும் பொல்லுகளைக் காட்டிக் கடுமையாக அச்சுறுத்தினர்.இதனால் அப்பகுதியில் பொலிஸாருக்கும்,பொதுமக்களுக்குமிடையில் கடும் வாக்கு வாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
பொலிஸாரினதும்,சி.ஜ.டியினரதும் இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்களும்,பொதுமக்களும் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
[youtube url=” https://www.youtube.com/watch?v=5MXQ-oHspLs&feature=youtu.be” width=”500″ height=”300″]
[youtube url=”https://www.youtube.com/watch?v=toCiqenOY7k&feature=youtu.be ” width=”500″ height=”300″]