செய்திகள்

யாழ். கோண்டாவில் விபத்தில் 3 பிள்ளைகளின் தந்தை பலி

யாழ்ப்பாணம் கோண்டாவில் டிப்போ சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.

யாழில் இருந்து வந்த தனியார் பிஸ்கெட் நிறுவனத்துக்கு சொந்தமான வாகனத்தால் மோதுண்ட நிலையிலேயே மேற்படி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த 53 வயதான ஞானசேகரம் என்பவரே உயிரிழந்தவராவார். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டியவர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் பொலிஸார் அவருக்கு சார்பாக செயற்பட்டதனை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதாக அறிய முடிகிறது.

பொலிஸாருக்கு எதிராக கோஷம் எழுப்பிய பொதுமக்கள் சாரதியைக் கைது செய்யும் வரை வாகனத்தை எடுக்க விடமாட்டோம் எனக் கூறி வீதியில் படுத்து போராட்டம் நடாத்தினர்.

இதனையடுத்து பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர் அவ்விடத்தில் பொல்லுத் தடிகளுடன் குவிக்கப்பட்டனர். கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்துக்கு வந்தவுடன் சற்று அமைதி நிலை ஏற்பட்டது.

முழுமையான விபரங்கள் விரைவில்..

யாழ் நகர் நிரூபர்-