செய்திகள்

யாழ்.கோப்பாய் ஆசிரிய கலாசாலை நூலகத்திற்கு வடமாகாண சபையால் நூல்கள் வழங்கி வைப்பு

யாழ்.கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை நூலகத்துக்கு வடமாகாணக் கல்வியமைச்சு நிதியில் நூல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் கலாசாலை மண்டபத்தில் அதிபர் வீ.கருணைலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வடமாகாணக் கல்வியமைச்சர் த.குருகுலராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், கலாசாலையின் முன்னாள் அதிபர் கணபதிப்பிள்ளை ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலாசாலைக்குத் தேவையான 60 ஆயிரம் ரூபா பெறுமதியான நூல்கள் கையளிக்கப்பட்டதுடன் அதிதிகள் கலாசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் கலாசாலையின் விரிவுரையாளர்கள்,ஆசிரிய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

unnamed (1) (10) unnamed (3) (5) (1) unnamed (7) (5)

யாழ்.நகர் நிருபர்-