செய்திகள்

யாழ்.சாவகச்சேரியில் ஊரடங்கு வேளையிலும் வீடு புகுந்து கொள்ளை

ஊரடங்கு வேளையிலும் வீடு புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.வீட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வயோதிபர்களான கணவன் – மனைவியை தாக்கி அவர்கள் அணிந்திருந்த 5 பவுண் நகைகள் மற்றும் வீட்டிலிருந்த 16 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றைக் கொள்ளையிடப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், கொள்ளையர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த வயோதிபர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பான விசாரணையை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த சம்பவம் சாவகச்சேரி, மண்டுவில் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.(15)529ed4d2-57d8-47e5-bb9d-a6a392a1205d-1024x576 dfe5dfa8-4075-4c35-bc18-37f8d05fd53d-1024x576 e5c81a01-1ede-48c2-bff3-3228ea1fd544-1024x576 f4a32193-744a-4a73-bc4f-1e3c2207f8cb-1024x576