செய்திகள்

யாழ்.சாவகச்சேரி பகுதியின் பல இடங்களிலும் கிருமி தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கை

கொழும்பிலிருந்த வந்தள்ள விசேட குழுவினர், விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் சுகாதாரதப் பிரிவினர் இணைந்து கொரோனோ வைரஸ் தாக்கத்தைக் கட்டப்படுத்தும் நோக்கில் யாழ் மாவட்டத்தின் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை சாவகச்சேரியில் இன்று மேற்கொள்ளப்பட்டது.குறிப்பாக சாவகச்சேரி பஸ் நிலையம், பொதுச் சந்தை, புகையிரத நிலையம், பிரதேச செயலகம், வங்கிகள் உள்ளிட்ட பல இடங்களிலும் கிரு நீக்கி விசுறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதே போல தொடர்ந்தும் ஏனைய இடங்களிலும் இச் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விசேட நடவடிக்கையில் அதிரடிப்படையினர் பொலிஸார் சுகாதாரதப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்து வருகின்ற இந்த நடவடிக்கை யாழ் நகரில் ஆரம்பித்து தொடர்ச்சியாக பல்வேறு இடங்களிலும் இச் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக இன்று சாவகச்சேரிப் பகுதியின் பல இடங்களிலும் கிருமி தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கையை முன்னெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)1 2 3