செய்திகள்

யாழ் சிறைச்சாலையில் இருந்து சிறு குற்றங்களில் ஈடுபட்ட 241 கைதிகள் இதுவரை விடுவிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக சிறைச்சாலைகயில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறு குற்றங்க ளுடன் தொடா்புடையவா்களை பிணையில் விடுதலை செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துள்ள சிறப்பு நடவடிக்கையின் கீழ் நீதிமன்றங்கள் ஊடாக கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சிறு குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 கைதிகள் நேற்று செவ்வாய்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்றும் 44 பேர் விடுவிக்கப்பட்டனர். கடந்த சில தினங்களா மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த நடவடிக்கை ஊடாக 197 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தனர். நேற்று விடுவிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மொத்தமாக 241 பேரும் யாழ் மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.(15)