செய்திகள்

யாழ்- சுன்னாகத்தில் இளைஞர் ஒருவர் மீது இராணுவம் தாக்குதல்

யாழில் இளைஞர் ஒருவர் மீது இராணுவச் சிப்பாய் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.நேற்று ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ் (வயது-22) என்ற இளைஞரே இவ்வாறு சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினர், தன்னை வழிமறித்துத் தாக்கியதாக இளைஞர் வைத்தியசாலையில் தெரிவித்துள்ளார்.இதேவேளை சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.(15)