செய்திகள்

யாழ். சுன்னாகத்தில் பெற்றோல் குண்டுகள், வாள்கள் சகிதம் இளைஞர் குழுக்கள் மோதல்

யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே நேற்றிரவு இடம்பெற்ற மோதலால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்ற நிலை காணப்பட்டது.

மோதலில் ஈடுபட்டவர்கள் பெற்றோல் குண்டுகள், வாள்கள் மற்றும் கைக்கோடரிகளுடன் மோதலில் ஈடுபட்டனர். இதில் இருவர் காயமடைந்தனர். பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மோதல் இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற பொலிஸார் நால்வரைக் கைது செய்தனர். ஏனையோர் தப்பியோடினர்.

பொலிஸார் அப்பகுதியிலிருந்து பெறறோல் குண்டுகள் சிலவற்றையும் 2 வாள்கள், 2 கைக்கோடரிகளையும் கைப்பற்றினர். கைதான நால்வரையும் இன்று திங்கட்கிழமை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார், தப்பிச் சென்றவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.