செய்திகள்

யாழ்.சுன்னாகம் கதிரமலைச் சிவன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் (படங்கள்)

பிரசித்தி பெற்ற சுன்னாகம் கதிரமலைச் சிவன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை(05.5.2015) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இந்த ஆலய மஹோற்சவத்தில் எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை மாலை திரு வேட்டைக் காட்சியும், 14 ஆம் திகதி மாலை சகோபுரக் காட்சியும்(சப்பறத் திருவிழா), 15 ஆம் திகதி மாலை கிருஷ்ணகந்தோற்சவக் காட்சியும், 16 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு தேர்த்திரு உலாக் காட்சியும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தீர்த்தோற்சவமும் நடைபெறும்.

அன்றைய தினம் மாலை கொடியிறக்கமும் இடம்பெறும்.19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை சங்காபிஷேகமும் நடைபெறும்.

மஹோற்சவ காலங்களில் காலை உற்சவம் தினசரி காலை 7 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகும் பூசைகள் முற்பகல் 11 மணிக்கு நிறைவுபெறும்.

மாலை உற்சவம் பிற்பகல் 05 மணிக்கு ஆரம்பமாகி இரவு 08.30 மணிக்கு நிறைவேறும். மஹோற்சவ காலத்தில் தினசரி காலை உற்சவத்தின் போது அன்னதானம் வழங்கப்படும்.

யாழ் நகர் நிரூபர்-

IMG_3125

IMG_3127

IMG_3128

IMG_3129