செய்திகள்

யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியில் க.பொ.த உயர்தரத்தில் தொழில்நுட்பவியல் பாடநெறி

யாழ்ப்பாண சென் ஜோன் கல்லூரிக்கு க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தொழில்நுட்பவியல் பாடத்துறையை ஆரம்பிப்பதற்கான உத்தியோக பூர்வ அனுமதியை கல்வி இராஜாங்க அமைச்சரும் அமைச்சின் செயலாளருமான டக்ளஸ் நாணயக்கார ஆகியோரும் இணைந்து இன்று வழங்கி வைத்தனர்.

இந்த பாடத்திட்டத்திற்கான கட்டிடத்தையும் அதற்கான பொருட்களையும் பாடசாலை நிர்வாகம் தமது சொந்த பணத்தில் செலவு செய்து இந்த பாடத்திட்டத்தை இங்கு ஆரம்பிக்கவுள்ளது.இந்த திட்டத்திற்காக 60 மில்லியன் ரூபா செலவு செய்யப்படவுள்ளதாக பாடசாலையின் அதிபர் வணக்கத்திற்குறிய ந.ஜோ.ஞானப் பொன்ராஜா தெரிவிக்கின்றார். 30 மில்லியன் ரூபா கட்டிடத்திற்காகவும் மிகுதி 30 இலட்சம் ரூபா உபகரணங்களும் செலவு செய்யப்படவுள்ளது.
இந்த பாடத்திட்டத்தில் பொறியியல் தொழில் நுட்பவியல் மற்றும் உயிர் முறையிலான தொழில்நுட்பவியல் ஆகிய பாடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க பாடசாலைகளுக்கு இந்த பாடத்திட்டத்தை அரசாங்கத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 1000பாடசாலைகள் வேலைத்திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Rathakrishnan (2) Rathakrishnan (3)