செய்திகள்

யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் குருதிக் கொடையாளர் கௌரவிப்பு நேற்று

உலகக் குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் ஏற்பாட்டில் குருதிக் கொடையாளர் கௌரவிப்பு விழா நேற்று 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவு மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் தெல்லிப்பழைப் புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவு வைத்திய நிபுணர் கவிதா இந்திரநாத் பிரதம விருந்தினராகவும்,தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் மு.உமாசங்கர்,தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் பொதுமருத்துவ நிபுணர் டாக்டர்.நளாயினி ஜெகதீசன், வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு குருதிக்கொடையாளர்களைக் கௌரவித்தனர்.இவ் வருடம் கௌரவிப்புப் பெறுவதற்கு 10 தடவைகளுக்கு மேல் குருதிக் கொடை வழங்கிய 93 பேர் தகுதி பெற்றிருந்தனர்.தெரிவு செய்யப்பட்ட குருதிக் கொடையாளர்கள் அனைவரும் நினைவுப் பரிசில்களும்,சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ம.பிரதீபன்,நோயாளர் நலன்புரிச் சங்கச் செயலாளர் லயன் சி.ஹரிகரன்,தாதிய பரிபாலகர் சோ.இராசேந்திரன் உட்படக் குருதிக் கொடையாளர்கள்,மாணவர்கள்,நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.குருதிக் கொடை விழிப்புணர்வுக் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. யாழ்.நகர் நிருபர்-

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA