செய்திகள்

யாழ் நகரின் பொலிஸ் கண்காணிப்பகம் சேதம்!

யாழ்.மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இருந்த பொலிஸ் கண்காணிப்பகம், இனந்தெரியாத சிலரால் நேற்றையதினம் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது. யாழ்.நீதிமன்ற வளாகத்தில் கலகம் விளைவித்தவர்களை பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைத்த போது, அங்கிருந்து ஓடியவர்கள் பொலிஸ் கண்காணிப்பகத்தை அடித்து உடைத்துள்ளனர்.

கண்காணிப்பகம் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. யாழ்.நகரத்தில் நடைபெறும் குற்றச்செயல்களை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில் இந்த பொலிஸ் கண்காணிப்பகம் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.