செய்திகள்

யாழ்.நகரில் நாளை இடம்பெறவுள்ள தந்தை செல்வாவின் 38 ஆவது நினைவு நாள் நிகழ்வு

தந்தை செல்வாவின் 38 ஆவது நினைவு நாள் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (26.04.2015) காலை 09.30 மணி முதல் யாழ்.நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.

தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் தலைவர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் அஞ்சலியுரைகளை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் அருட்தந்தை சி.ஜி.ஜெயக்குமார், மௌலவி எம்.ஐ.மஹ்மத் ஆகியோர் நிகழ்த்துவர்.

சிறப்புரையைச் சட்டத்தரணி கனக மனோகரனும்,நினைவுப் பேருரையைக் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி அதிபர் ச.லலீசனும் ஆற்றவுள்ளனர்.

யாழ்.நகர் நிருபர்-