செய்திகள்

யாழ்.நகர்ப்புற உணவகங்களில் சுகாதாரப் பிரிவினர் திடீர் பரிசோதனை

உணவுப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு யாழ்.மாநகரப் பகுதியிலுள்ள உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகள், வர்த்தக நிலையங்களைச்சோதனை செய்யும் பணியில் சுகாதாரப் பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக யாழ்.நகரப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் உள்ள உணவகங்கள், வர்த்தக நிலையங்கள் என்பன சோதனைக்குட்படுத்தப்பட்டன.

போதிய சுகாதார நடைமுறையைப் பின்பற்றாத உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உணவகங்களில் பணியாற்றுகின்ற பணியாளர்கள் தலைக்குத் தொப்பி அணிந்து பணியாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அத்துடன் பணியாளர்கள் மருத்துவச் சான்றிதழ்களையும் பெற்றிருக்க வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகளைப் பின்பற்றாத உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான இந்தத் திடீர் சோதனை நடவடிக்கைகள் இந்த வாரத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

யாழ் நகர் நிரூபர்-