செய்திகள்

யாழ்.நகர மத்தியில் சுமார் 70 வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனையவைகளை மீள திறப்பதற்கு இன்று அனுமதி

யாழ்.மாநகர மத்தியில் சுமார் 70 வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனையவைகளை மீள திறப்பதற்கு இன்று அனுமதியளிக்கப்பட்டுள்ளது.குறித்த வர்த்தக நிலையங்களை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மீளத் திறப்பதற்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.இதேவேளை யாழ்.மாநகர மத்திய பேருந்து நிலையத்தில் இன்று முதல் பேருந்து சேவைகளை நடத்த வட.பிராந்திய போக்குவரத்து சபைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.மேலும் பேருந்து சேவைகளின்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக அடையாளம் காணப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர் அல்லது பணியாளர் உள்ள சுமார் 70 வர்த்தக நிலையங்களுக்கு யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.அவை தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மீளத் திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.(15)