செய்திகள்

யாழ்.நவாலி முருகானந்த முன்பள்ளியின் விளையாட்டு விழா

யாழ்.நவாலி முருகானந்த முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் முருகானந்த சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்றது.

இந்த விழாவில் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

முன்பள்ளிச் சிறார்களின் பலூன் உடைத்தல்,நீர் நிரப்புதல்,இசையும் அசைவும்,விநோத உடை போன்ற பல்வேறு போட்டி நிகழ்வுகளும் கண்களுக்கு விருந்தளித்தன.போட்டிகளில் வெற்றி பெற்ற மழலையர்களுக்கு விருந்தினர்கள் பரிசில்களை வழங்கி வைத்தனர்.

இந்;த விளையாட்டு நிகழ்வில் பழைய மாணவர்கள்,பெற்றோர்கள்,ஊரவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மழலையரின் விளையாட்டு நிகழ்வுகளை மெய்மறந்து இரசித்தனர். யாழ்.நகர் நிருபர்-

20150531_170936 20150531_144743 20150531_144344