செய்திகள்

யாழ்.நவாலி வடக்கு முதியோர் சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு விழாவில் முதியோர் கௌரவிப்பு

யாழ்.நவாலி வடக்கு முதியோர் சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு விழா அண்மையில் மேற்படி சங்கத்தின் தலைவர் டாக்டர் சோ.சுந்தரராசன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த விழாவில் ஓய்வு நிலை சமூக சேவைத் திணைக்களத்தின் அத்தியட்சகரும் ,வடபிராந்திய சத்தியசாயி நிறுவனங்களின் கல்வி மேம்பாட்டு இணைப்பாளருமான கே.வி.சிவனேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இதன் போது 80 முதியவர்களுக்குச் சங்கத்தின் நிதியில் வழங்கப்பட்ட புத்தாடைகளைப் பிரதம விருந்தினர் சம்பிராதய பூர்வமாக வழங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து முதியோர்களின் ஆடல் பாடல் நிகழ்வுகளும் நடைபெற்றன. யாழ்.நகர் நிருபர்-

IMG_2929