செய்திகள்

யாழ்.நாவாந்துறையில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 பேருக்கும் கோரோனா தொற்று இல்லை

அரியாலை தேவாலயத்தில் சுவிஸ் போதகர் நடத்திய ஆராதனையில் பங்கேற்ற நாவந்துறையைச் சேர்ந்த 4 குடும்பங்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளனர். அவர்கள் 8 பேரின் மாதிரிகளே கொரோனா தொடர்பான பரிசோதனைக்கு இன்று பெறப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவர்கள் 8 பேருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் – நாவாந்துறையில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 பேருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.(15)