செய்திகள்

யாழ் நாவாந்துறை காதீர் அபூபக்கர் வீதியில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நீர்கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்றையதினம் உயிரிழந்த நிலையில், குறித்த நபர் நாவாந்துறை பகுதியில் மூன்று குடும்பங்களின் வீடுகளில் தங்கி சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்நிலையில் யாழ்ப்பாணம் நாவாந்துறை காதீர் அபூபக்கர் வீதியில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

அத்துடன் நாவாந்துறை முழுவதும் முடக்கப்பட்டுள்ளது என சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளை நம்ப வேண்டாம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.மேலும் குறித்த நபர் நாவாந்துறை பகுதியில் மூன்று குடும்பங்களின் வீடுகளில் தங்கி சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த மூன்று குடும்பங்களும் கிராமசேவையாளரின் கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)
Screenshot_20200331-173501-1Screenshot_20200331-173403-1