செய்திகள்

யாழ்.நீதிமன்றத்துக்கு கல்லெறிந்த மேலும் ஒரு இளைஞர் கைது

யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நாவாந்துறையைச் சேர்ந்த மேலும் ஒரு இளைஞர் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் நீதிமன்றத்தினை நோக்கி கல்வீச்சு மேற்கொண்டதற்கான புகைப்பட ஆதாரத்தைக் கொண்டே அவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.கைது செய்யப்பட்ட இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தான் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டமையை ஒப்புக் கொண்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.