செய்திகள்

யாழ். நீதிமன்ற தாக்குதல்: நல்லூரில் மற்றொருவர் இன்று கைது

யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் நல்லூரில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் சந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது யாழ். நீதவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மேலும் 15 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.