செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் 4000 க்கும் மேற்பட்டவர்கள் சிங்கள மாணவர்கள் கல்வி பயில்வதே நல்லிணக்கத்திற்கான எடுத்துக்காட்டு – நிதி இராஜாங்க அமைச்சர்

யாழ். பல்கலைக்கழகத்தில் 4000 க்கும் மேற்பட்டவர்கள் சிங்கள மாணவர்கள் கல்வி பயில்வதே நல்லிணக்கத்திற்கான எடுத்துக்காட்டு என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 12 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயில்வதாகவும் அவர்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிங்கள மாணவர்கள் என்றும் சுட்டிக்காட்டிய அவர் இது நல்லிணக்கத்திற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என மேலும் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் இந்த விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)