யாழ். பல்கலைக்கழக முறைகேடுகள் தொடர்பில் முழுமையாக விசாரிக்குமாறு ஊழியர் சங்கம் வேண்டுகோள்
யாழ்.பல்கலைக் கழகத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவிடம் யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பல்கலைக்கழகச் சூழலில் நன்மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
மெதுவாகவெனினும் உறுதியான மாற்றங்கள் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ளது.பழைய பேரவை உறுப்பினர்கள் முற்றாக அகற்றப்பட்டுப் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது போலவே கடந்த காலங்களில் ஏற்பட்ட ஊழல் மோசடிகளையும் விசாரணை செய்ய வேண்டுமென ஊழியர் சங்கம் மேலும் கேட்டுள்ளது.
யாழ்.நகர் நிருபர்-