செய்திகள்

யாழ். பல்கலையில் மாவீரர் வார நினைவேந்தல்!

மாவீரர் வாரம் இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதல் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதன்படி இன்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவு தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவீரர் வாரத்தை முன்னிட்டு, பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதி மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.

இதேவேளை உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்திலும் மாவீரர் நினைவு வாரத்தின் முதல் நாள் நினைவேந்தல் இன்று இடம்பெற்றது.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இதற்கு தடை விதிக்க கோரிய பொலிஸாரின் பல மனுக்கள் நீதிமன்றங்களினால் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-(3)