செய்திகள்

யாழ். பாட­சா­லைகள் அருகே ஐஸ்­கிறீம் வெற்­றிலை விற்­பனை செய்­வ­தற்கு தடை

யாழ்ப்­பாணம் தலைமை பொலிஸ் நிலை­யத்­திற்கு உட்­பட்ட பாட­சா­லை­களை அண்­மித்த பகு­தியில் ஐஸ்­கிறீம், வெற்­றிலை போன்­ற­வற்றை விற்­பனை செய்ய பொலிஸார் தடைவிதித்­துள்­ளனர். ஐஸ்­கிறீம், வெற்­றிலை போன்­ற­வற்­றுடன் சேர்த்து பான் பராக் மற்றும் போதைப் பொருட்கள் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு விற்­பனை செய்­யப்­ப­டு­வ­தா­கவும் அதனை தடுக்கும் முக­மாக இவ்­வா­றான விசேட நட­வ­டிக்கை ஒன்­றினை முன்­னெ­டுத்­துள்­ள­தாக யாழ்.தலை­மை­யக பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் உதய குமார வுட்லர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

அத்­துடன் பாட­சா­லைகள் மற்றும் கல்வி நிலை­யங்கள் ஆகி­ய­வற்­றுக்கு பெண் பிள்­ளைகள் சென்றுவரக் கூடிய சுதந்­திர சூழலை உரு­வாக்கும் முக­மாக அவ்­வா­றான இடங்­க­ளுக்கு அருகே சிறிய படிக்­கட்­டுக்கள், சுவர்­களில் கூட்­ட­மாக இருந்த வண்ணம் தொந்­த­ரவு செய்யும் இளை­ஞர்­களை கைது செய்யவும் நடவ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.

சிறுவர் மற்றும் பெண்­க­ளுக்கு அச்­சு­றுத் தல் அற்ற சூழலை உரு­வாக்­குதல் மற்றும் போதைப் பொருள் தடுப்பு ஆகி­ய­வற்றை இலக்­காக கொண்டு இந்த ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார். இது தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலை­யத்தின் பொலிஸ் பரி­சோ­த­கர்கள் மூவரின் கீழ் விசேட பொலிஸ் குழுக்கள் மூன்று அமைக்­கப்­பட்டு பணியில் ஈடு­ப­டுத்­தப்பட்­ டுள்­ள­தா­கவும் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் உத­ய­கு­மார வுட்லர் சுட்­டிக்­காட்­டினார். இது தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது,

யாழ்.பொலிஸ் நிலைய அதி­கா­ரப் ­ப­கு­தியில் கல்வி நிலை­யங்கள் மற்றும் பாட­சா­லைகள் இருக்கும் பகு­தி­களில் பொலிஸார் சிவில் மற்றும் சீரு­டையில் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு போதைப் பொருள் விற்­பனை செய்யப்­ப­டு­வது குறித்து பல்­வேறு தரப்­பி­னரும் முறைப்­பா­டு­களை செய்து வந்த நிலை­யி­லேயே இந்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

புதி­தாக யாழ்ப்­பாணம் பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்­ப­தி­கா­ரி­யாக நிய­மிக்­கப்­பட்ட பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் உதய குமார வுட்லர் தனது பொலிஸ் நிலை­யத்தில் கடமைபுரியும் பொலிஸ் பரி­சோதகர் ஒரு­வரின் கீழ் இது தொடர்பில் விஷேட பொலிஸ் குழு­வொன்றை நிய­மித்­துள்ளார்.

அதன்­படி பாட­சாலை மண­வர்­க­ளுக்கு ஐஸ்­கிறீம் விற்­பனை செய்யும் தோர­ணை­யிலும் அதன் அருகே வெற்றிலை விற்பனை செய்யும் தோர­ணை­யிலும் பான்­பராக் உள்­ளிட்ட போதைப் பொருட்கள் விற்­பனை செய்­வது குறித்து பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைத்­துள்­ளது.

பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் உத­ய­கு­மார வுட்லர் யாழ்.பாட­சா­லை­களில் கடந்த இரு வாரங்­க­ளுக்கு மேலாக நடத்தி வந்த விஷேட விழிப்­பு­ணர்வு கருத்­த­ரங்­கு­களை அடுத்தே அது தொடர்பில் தகவல் பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் பாதைகளின் ஒரு சில இடங்களில் இருந்த வண்ணம் பெண்­களை தொந்­த­ரவு செய்து வந்த இளை­ஞர்கள் சிலரை பொலிஸார் கைது செய்து, பெற்றோரை அழைத்து எச்­ச­ரித்த பின்னர் விடு­தலை செய்­துள்­ளனர். தமக்கு எதி­ரான நிலை­மை­களை எவ்­வாறு அடை­யாளம் காண்­பது? எப்­படி அதனை எதிர்­கொள்­வது? போன்ற விட­யங்கள் உள்­ளிட்ட பாது­காப்பு வழி­மு­றைகள் தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உதய குமார வுட்­ல­ரினால் பிரத்­தி­யே­க­மாக ஒவ்­வொரு பாட­சா­லைக்கும் சென்று மாண­வர்­களை சந்­தித்து அறி­வு­றுத்தல் வழங்­கப்­பட்­டுள்­ளது.