செய்திகள்

யாழ் புத்தூரில் கோஷ்டி மோதலுடன் தொடர்புடைய மூவர் கைது

யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்குப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கோஷ்டி மோதலுடன் தொடர்புடைய மூவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை (02.5.2015) இரவு அச்சுவேலிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தூர் கிழக்கு அண்ணமார் கோயில் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 21 வயதான இளைஞனொருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் இரகசியப் பொலிஸார் கோஷ்டி மோதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரையும் அவரது வீடுகளில் வைத்துக் கைது செய்துள்ளனர்.

யாழ்.நகர் நிருபர்-