செய்திகள்

யாழ். புன்னாலைக்கட்டுவனில் வாழைக் குலைத் திருட்டு அதிகரிப்பு

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் தெற்கு ஆயக்கடவை சித்தி விநாயகர் ஆலயத்துக்கு அண்மையிலுள்ள வாழைக் குழைத் தோட்டமொன்றில் அண்மைக் காலமாக இரவு நேரங்களில் கப்பல் வாழைக் குலைகள் திருட்டுப் போவதாகத் தோட்ட உரிமையாளர் தெரிவித்தார்.

கந்தசாமி கணேசமுருகன் என்ற இளம் விவசாயிக்குச் சொந்தமான தோட்டத்திலேயே அடிக்கடி இவ்வாறான திருட்டுச் சம்பவம் இடம்பெறுகிறது.

இதனால் புன்னாலைக் கட்டுவன் பிரதேசத்திலுள்ள ஏனைய வாழைக் குலைத் தோட்டக்காரர்களும் அச்சமடைந்துள்ளனர்.