செய்திகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இல்லை

யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் தனிமைப்படுத்திவைக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து 4 வயது சிறுமி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று வியாழக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபருடைய சகோதரியின் மகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.யாழ்.போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி குறித்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.(15)