செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் பொலிஸ் உத்தியோகத்தர் கொரோனா தொற்றுத் தொடர்பான பரிசோதனைக்காக அனுமதி

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.காய்ச்சல் காரணமாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பரிசோதனைக்காக கோரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று முற்பகல் 10.30 மணிவரையான நிலவரத்தின் படி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 3 பேர் கோரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான பரிசோதனைக்காக கண்காணிக்கப்படுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டதையடுத்து அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிறப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)