செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 6 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை

யாழ் போதனா வைத்தியசாலையில், தற்போதுவரை கொரோனா பரிசோதனை மேற்கொண்டு 39 பேர் வௌியேறியுள்ளனர். அதேபோன்று சந்தேகத்தின் பேரில் 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர் என்று ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 6 பேருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தகவல் வெளியிட்டுள்ளார்.தொற்றுக் குறித்து 6 பேரிடமும் பரிசோதிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் இந்தத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.(15)