செய்திகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் பரிசோதனை செய்யப்பட்ட 17 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று னுமதிக்கப்பட்டு தங்கியிருந்த மூவருக்கும், வைத்தியசாலைக்கு வெளியே தொற்றுக்கு உள்ளனவர்களுடன் தொடர்புடைய 14 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.குறிப்பாக மானிப்பாய் பகுதியில் எட்டு பேருக்கும் அரியாலைப் பகுதியில் ஆறு பேருக்கும் இந்த பரிசோதனை செய்யப்பட்டது.இந்நிலையில் அவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.இதேவேளை யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை பரிசோதனை செய்யப்பட்ட 17 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)