செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 பேருக்கு கொரோனா தொற்றுக்கான ஆய்வுகூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது என வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தகவல் வெளியிட்டுள்ளார்.அத்துடன் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இருவருக்கும் வவுனியா பகுதியைச் சேர்ந்த எட்டு பேருக்கும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 10 பேருக்கும் மேற்படடி ஆய்வுகூடப் பரிசோதனை செய்யப்பட்டது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்றைய தினம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தகவல் வெளியிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள தகவல்களில் இதனை தெரிவித்துள்ளார்.(15)