செய்திகள்

யாழ்.மயிலங்காட்டுப் பகுதியில் 12 லீற்றர் கசிப்பு மீட்பு:சந்தேகத்தின் பேரில் 54 வயதுடைய நபர் கைது

யாழ்.ஏழாலை மயிலங்காட்டுப்பகுதியில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 லீற்றர் கொள்ளளவு கொண்ட கசிப்புப் போத்தல்கள் நேற்று வியாழக்கிழமை(28.5.2015) சுன்னாகம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் 54 வயதுடைய நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய குறித்த பற்றைப் பகுதியில் தேடுதல் மேற்கொண்ட போதே 5 போத்தல்களிலிருந்து 12 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேகநபர் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

யாழ்.நகர் நிருபர்-