செய்திகள்

யாழ் மாணவியின் கொலையை விசாரிக்க விசேட நீதிமன்றம் அமைப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது : பொது பல சேனா

வடக்கில் மாணவியின் கொலை தொடர்பாக விசாரணை நடத்தவென விசேட நீதிமன்றத்தை அமைப்பதனை தாம் அனுமதிக்கப்போவதில்லையெனவும் காஹவத்தை பகுதியிலும் இது போன்று பெண்கள் கொலை செய்யப்பட்ட போது அவ்வாறு விசேட நீதி மன்றம் அமைக்காதது ஏன் எனவும் கேள்வியெழுப்புவதாகவும்  பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கில்  மாணவியின் கொலை சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். ஆனால் அந்த கொலை தொடர்பாக விசேட நீதிமன்றம் அமைக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.இரத்தினபுரி கொட்டகேதென்ன பகுதியில் இது போன்று பெண்கள் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்யப்பட்ட போது விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டதா. வடக்கிற்கு ஒரு சட்டமும் தெற்கிற்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது. நாட்டுக்கென ஒரே சட்டமே இருக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.