செய்திகள்

யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று மின்தடை

யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று வியாழக்கிழமை (07.5.2015) காலை 08.30 மணி தொடக்கம் மாலை 05.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

யாழ்.மாவட்டத்தில் காங்கேசன் துறை, நகுலேஸ்வரம், மாவைக் கலட்டி, கொல்லங் கலட்டி, மாவிட்டபுரம், கீரிமலை, பலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம், பலாலி இலங்கை விமானப் படை முகாம், பலாலி விமானப் படை ஓய்வு கால விடுதி, கீரிமலைத் துணைக் கடற்படை முகாம், காங்கேசன் துறை இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம், காங்கேசன் துறை வடக்குக் கடற்படை முகாம், வசாவிளான் டொலர் கூட்டுத்தாபனம், மயிலிட்டி கரிசன் 5 ஆவது பொறியியல் படை முகாம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

யாழ்.நகர் நிருபர்-

electric jaffna (4)