செய்திகள்

யாழ் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாது ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவிப்பு

மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.இதேவேளை வட மாகாணத்தில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு 27ஆம் திகதியான நாளை காலை 6 மணிக்கு நீக்கப்படவிருந்தது. தற்போதய கொரோனா வைரஸ் தொற்றும் நிலைமையை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு மாத்திரம் மீள் அறிவிப்பு வரை ஊரடங்கு உத்தரவினை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.(15)