செய்திகள்

யாழ். மாவட்டத்தில் 500 பேருக்குத் தொழில் வாய்ப்பு! யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்

யாழ்.மாவட்டத்தில் தொழில் தேடுவோருக்கான தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பிரபல தனியார் நிறுவனமொன்று முன்வந்துள்ளது.

குறித்த நிறுவனத்தின் 500 வரையான பணியிடங்களுக்கு ஆட்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வு யாழ்.மாவட்டச் செயலகப் பொதுமக்கள் சேவை நிலையமூடாக நடாத்தப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

க.பொ.த உயர்தரம் அல்லது சாதாரண தரத்தில் குறைந்தது 5 பாடங்களில் சித்தியடைந்த 27 வயதுக்கு மேற்படாத ஆண்களும், 24 வயதுக்கு மேற்படாத பெண்களும் இத் தொழில் வாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.

தொழில் தேடுவோர் இதற்குரிய பதிவுகளை மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள மாவட்டப் பொதுமக்கள் சேவை நிலையத்தில் எதிர்வரும்-21 ஆம் திகதிக்கு முன்னதாக மேற்கொள்ள முடியும்.

குறித்த தொழில் வாய்ப்புக்கள் தொடர்பான மேலதிக விபரங்களை 0212219359 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியுமென அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.