செய்திகள்

யாழ்.மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுக் கொடுக்க யாழ்.வணிகர் கழகம் நடவடிக்கை

யாழ் .நகர் மற்றும் அண்டிய பகுதி தனியார் நிறுவனங்களில் யாழ்.மாவட்ட இளைஞர்கள்,யுவதிகளுக்கு இலவசமாக வேலை பெற்றுக் கொடுப்பதற்கு யாழ்.வணிகர் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரம் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் குறிப்பிட்டதாவது,

ஏற்கனவே மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் வேலை வங்கி ஆரம்பிக்கப்பட்டது.அந்த வேலை வங்கி மூலமாக ஏராளமான இளைஞர் யுவதிகள் தனியார் துறையிலே வேலைவாய்ப்புக்கு உள்வாங்கப்பட்டனர்.அதன் மூலம் வேலை வாய்ப்பைப் பெற்ற பலர் இன்றும் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.தற்போதைய நிலையிலே தனியார் துறையிலே பல வெற்றிடங்கள் காணப்படுவதால் மீண்டும் அந்த வேலை வங்கியை நாங்கள் ஆரம்பிக்கவிருக்கிறோம்.

சிற்றூழியர்கள்,கணக்குப் பதிவாளர்கள்,கணனி ஒப்பரேற்றர்,கணக்குப் பதிவாளர்கள்,முகாமையாளர்கள்,சாரதிகள்,விற்பனைப் பிரதிநிதிகள்,சாரதிகள் இவ்வாறு பல தரப்பட்டவர்களிடமிருந்து நாங்கள் விண்ணப்பங்களைக் கோருகிறோம்.  ஆகையால் நாளை வியாழக்கிழமை(23.04.2015) முதல் விண்ணப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம்.அவர்கள் தங்களுடைய சுய விபரங்களை விரும்பும் தொழிலைக் குறிப்பிட்டு வணிகர் கழகத்தில் ஒப்படைக்கலாம்.அல்லது யாழ்.வணிகர் கழகம்,165,மானிப்பாய் வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம். வேலை செய்ய ஆர்வமுள்ளவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார். (யாழ்.நகர் நிருபர்)IMG_2411 IMG_2412