செய்திகள்

யாழ் மாவட்ட த்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் கைது

சந்தேக நபராக யாழ் மாவட்டத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.ஜி. விமலசேன கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையலுவலகம் அறிவித்துள்ளது .

பியகம பிரதேச வர்த்தகர் ஒருவரது கொலையுடன் தொடர்புபட்டிருந்த ஒருவருக்கு உதவினார் அதேநேரம் பொய் சாட்சியம் ஒன்றை தயாரித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012 ஆமாண்டு குறித்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது. அக்காலப்பகுதியில் விமலசேன பியகம ப்பகுதியில் பணிபுரிந்துள்ளார். வர்த்தகரை கொன்றது வர்த்தகரின் மகனே என தெரிவிக்கப்படுகின்றது. யாழ் பொலிஸ் அத்தியட்சகருடன், கொஸ்கொட பிரதேச பொலிஸ் ஒருவாரம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.