செய்திகள்

யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபராக நல்லூர் பிரதேச செயலர் செந்தில் நந்தனன் நியமனம்

யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபராக நல்லூர் பிரதேச செயலர் பா.செந்தில்நந்தனன் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபராகக் கடமையாற்றி வந்த திருமதி.ரூபினி வரதலிங்கம் பதவியுயர்வு பெற்று வடமாகாண பொதுநிர்வாக ஆணைக்குழுவுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதையடுத்து நிலவும் பதவி வெற்றிடத்துக்கே செந்தில்நந்தனன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தெனது கடமைகளை இன்று திங்கட்கிழமை முதல் உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.