செய்திகள்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக எம். இளஞ்செழியன் நியமனம்

ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக எம். இளஞ்செழியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவனால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதுதொடர்பான நியமனக் கடிதம் நீதி சேவைகள் ஆணைக்குழுவினால் யாழ். மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாகக் குற்றவியல் வழக்குகள் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு வழக்குகளுக்கான மாகாணம் மற்றும் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதியாக எம். இளஞ்செழியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றி வரும் திருமதி சிவபாதசுந்தரம் கனகாம்பிகை மலர் யாழ். குடியியல் மேன் முறையீட்டு மேல் நீதிமன்ற ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.