செய்திகள்

யாழ் வாகன விபத்தில் தென்பகுதியை சேர்ந்த இருவர் பலி! பஸ் சாரதி கைது!

யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள். இவ்விபத்து தொடர்பில் பொலிஸாரால் பஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ், முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் இச்சம்பவத்தில் உயிரழந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டியில் பயணித்த அங்குராங்கெத்த பகுதி இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் யாழ். நாவற்குழியைச் சேர்ந்த பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். தலைமையக பொலிஸார் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.