செய்திகள்

யுத்தக் காலத்தில் காணாமல் போனவர்கள் வைத்தியசாலைகளுக்கு சென்றார்களா? ஆணைக்குழு ஆராய்கின்றது

யுத்த காலத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் நபர்கள் வைத்தியசாலைகளில் இருந்துள்ளார்களா என ஆராய நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக காணமால் போனவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி யுத்தக்காலத்தில் வடக்கு கிழக்கில் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற 14000 நோயாளர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தவைர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.