செய்திகள்

யுத்தத்தில் அனைத்து முடிவுகளையும் நானே எடுத்தேன்: கோத்தபாய

யுத்தம் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் பாது­காப்பு அமைச்சின் பத­வியில் நானே அனைத்துத் தீர்­மா­னங்­க­ளையும் எடுத்தேன் என முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ தெரி­வித்தார். புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட விடு­தலைப் புலி­களின் போரா­ளிகள் முழு­மை­யாக அவர்­க­ளது சிந்­த­னை­யி­லி­ருந்து விடு­பட்­ட­ன­ரா என்­பது தொடர்பில் இன்னும் எனக்குச் சந்­தேகம் நில­வு­கி­றது என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்ட பொது­பல சேனா அமைப்­புக்கும் தனக்கும் எந்­த­வித தொடர்பும் இல்லை. இது இட்­டுக்­கட்­டப்­பட்ட ஒன்­றாகும். இதே­வேளை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவி­னதும் எனதும் வாழ்நாள் முடியும் வரையும் விடு­தலைப் புலி­களின் அச்­சு­றுத்தல் இருந்­து­கொண்டே இருக்கும் என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் நேற்­றி­ரவு தனியார் தொலைக்­காட்சி ஒன்­றுக்கு நேரடி ஒளி­ப­ரப்புச் செவ்­வி­யின்­போதே இவ்­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

“நான் பாது­காப்புச் செய­லா­ள­ராகப் பதவி வகித்த காலப்­ப­கு­தியில் நேர்­மை­யான முறை­யி­லேயே எனது சேவையை முன்­னெ­டுத்தேன். நான் எந்­த­வொரு ஊழல் மோச­டி­க­ளிலும் ஈடு­ப­ட­வில்லை. எனவே தற்­போது என்­மீ­தான குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் நான் ஒரு­போதும் அஞ்­சப்­போ­வ­தில்லை. இது­கு­றித்து நீதி­யான விசா­ரணை நடத்­தப்­பட்டால் உண்மை வெளிவரும். எனினும் தற்­போது என்­னு­டைய நற்­பெ­ய­ருக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் இலக்­கு­ட­னேயே போலி­யான குற்­றச்­சாட்­டுக்­களை என்­மீது சுமத்­து­கின்­றனர். நீதி­யான விசா­ர­ணையின் பிற்­பாடு என்னை கைது செய்தால் நான் சிறை­வாசம் செல்­லவும் தயா­ரா­க­வுள்ளேன்.

முப்­பது வரு­ட­கா­ல­மாக இடம்­பெற்ற யுத்­தத்­தின்­போது எனக்கு அச்­சு­றுத்தல் இருந்­தமையை எவ­ராலும் மறுக்க முடி­யாத ஒன்­றாகும். எனினும் புலம்­பெ­யர்ந்­துள்ள விடு­த­லைப்­ பு­லி­களின் சார்­பா­ன­வர்­களால் தற்­போதும் எனக்கு அச்­சு­றுத்தல் இருக்­கின்­றது. யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்­டு­வந்­த­வர்கள் என்ற வகையில் முன்னாள் ஜனா­தி­ப­தியும் எனது சகோ­த­ர­ரு­மான மகிந்த ராஜபக்ஷவிற்கும் எனக்கும் வாழ்நாள் முடியும் வரையும் விடு­த­லைப் ­பு­லி­களின் அச்­சு­றுத்தல் தொடரும்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகச் செயற்­பட்ட பொது­பல சேனா­வுக்கும் எனக்கும் எந்­த­வொரு தொடர்பும் இல்லை. நான் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­ன­வல்ல. அத்­தோடு எந்­த­வொரு கும்­ப­லுக்கும் நான் தலை­மைத்­துவம் வழங்­க­வில்லை. ரத்னா லங்கா நிறு­வனம் தொடர்பில் என்­மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­ப­டு­கின்றன. 2010 ஆம் ஆண்டு அமைச்­ச­ர­வையின் ஊடாக சட்ட ரீதி­யாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட நிறு­வ­னமே ரத்னா லங்கா நிறு­வ­ன­மாகும்.

கடற்­கொள்­ளை­யர்­க­ளி­ட­மி­ருந்து பாது­காப்பைப் பெறும் நோக்­கு­ட­னேயே இந்த நிறு­வ­னத்தின் உத­வியை நாம் பெற்றோம். ஐக்­கிய நாடுகள் அமைப்புக் கூட கடற்­ப­ரப்பின் பாது­காப்­பிற்கு அனைத்து நாடு­களின் உத­வியைக் கோரி­யி­ருந்த நிலை­யி­லேயே நாம் இவ்­வா­றான செயற்­பாட்டை முன்­னெ­டுத்தோம். இதற்கு ஆயுதம் அவ­சியம். ஆயு­தத்தை பாது­காப்­ப­தற்கு ஆயுதக் களஞ்­சி­ய­சாலை அவ­சியம்.

எனினும் இந்த ஆயு­தங்­களை வைத்து என்­மீது குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்தப்படுகின்றன. குறித்த பாதுகாப்புச் சேவைக்கு நாம் ஓய்வுபெற்ற எமது இராணுவ வீரர்களையே உபயோகித்தோம். எனவே இது தவறு என்பதையே என்மீதான குற்றச்சாட்டுக்கள் புலப்படுத்துகின்றன. யுத்த காலத்தின்போது பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் அனைத்துத் தீர்மானங்களையும் நானே முன்னெடுத்தேன். இந்த விடயத்தில் நான் பொறுப்புடன் செயற்பட்டேன்” என்றார்.