செய்திகள்

யுத்தத்தில் அங்கவீனமான வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளிக்கு மருத்துவத்துக்கான நிதியுதவி

 

வவுனியாவைச் சேர்ந்த யுத்தத்தால் அங்கவீனமான முன்னாள் போராளியொருவருக்கு ஜேர்மனைச் சேர்ந்த டியுஸ்பேர்க் கரப்பந்தாட்ட விளையாட்டணி மருத்துவத்துக்கான நிதியுதவியினை உதவும் இதயங்கள் அமைப்பினூடாக வழங்கியுள்ளது.

அதன் இலங்கைக்கான இணைப்பாளர் ச.சஜீவன் உதவிகளை வீடு தேடிச் சென்று அண்மையில் சேர்ப்பித்திருந்தார்.

யுத்த அவலங்களை தாங்கியவாறு தாயகமெங்கும் ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அதே வேளை அவர்களது தேவைகள் கண்டுகொள்ளப்படாதேயுள்ளது.குறிப்பாக மருத்துவ உதவிகளை எதிர்பார்த்து வாடும் முன்னாள் போராளிகள் நிலையே அதிpல் மோசமாகவுள்ளது.

ஆனாலும் புலம்பெயர் தேசத்தின் ஏதாவதொரு மூலையினிலிருந்து உதவிகள் எப்போதும் தேடி வந்து கொண்டேயிருக்கின்றது.எனினும் அந்த உதவிகள் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்குப் போதுமானதாகக் காணப்படவில்லை என சஜீவன் தெரிவித்தார். யாழ்.நகர் நிருபர்-