செய்திகள்

யுத்தத்துக்கு பின்னரான நிகழ்ச்சித்திட்டம் குறித்து பான் கி மூன் ஜனாதிபதியுடன் பேச்சு

ஐ .நா . செயலாளர் நாயகம் பான் கி மூன் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு யுத்தத்துக்கு பின்னரான நிகழ்ச்சித்திட்டம் குறித்து உரையாடியிருக்கிறார்.

இந்தியாவுக்கு தற்சமயம் விஜயம் மேற்கொண்டிருக்கும் பான் கி மூன் சிறிசேனவுடனான உரையாடலின்போது அவரது 100 நாள் நிகழ்ச்சித் திட்டம் குறித்தும் வினவியதாக அவரது பேச்சாளர் பர்ஹான் ஹக் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார்.