செய்திகள்

யுத்தம் முடிந்த பின்னர் கைதான 219 பேர் தடுப்புக்காவலில்: அமைச்சர் விஜயதாச தகவல்

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் தொடர்­பி­லான பல்­வேறு தர­வுகள் முன்­வைக்­கப்­பட்­டாலும் யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்பட்ட பின்­ன­ ரான காலப்­ப­கு­தியில் பயங்­க­ர­வா­திகள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் 219 பேரே தற்­போது சிறைச்­சாலை தடுப்புக் காவலில் இருப்­ப­தாக நீதி அமைச் சர் விஜ­ய­தாஸ ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

அர­சியல் கைதிகள் தொடர்பில் அநு­ரா­த­பு­ரத்தில் விசேட நீதி­மன்­ற­மொன்றை தற்­போது உரு­வாக்கி அத­னூ­டாக விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப் பிட்டார். மேற்­கு­றித்த தர­வு­களின் அடிப்­ப­டையில் குற்றம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டதன் ஒ பிர­காரம் 54 பேருக்கு தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் .மேலும் 9 பேர் வரையில் இது­ரரை பினையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அமைச்சர் இதன்­போது சுட்­டி­காட்­டினார்.

01தமிழ் அர­சியல் கைதிகள் , வடக்கில் யுத்­த­தினால் இடம்­பெ­யர்ந்தோர் தொடர்­பி­லான சர்வ மத பேர­வை­யு­ட­னான விஷேட கலந்­து­ரை­யாடல் நேற்று நீதி அமைச்சில் இடம் பெற்­றது .இதன்­போது எத்­தா­லன்பே தம்­மா­லோக தேரர் தமிழ் அர­சியல் கைதிகள் தொடர்பில் உண்­மை­யான தக­வலை வெ ளியிடு­மாறு விடுத்த கோரிக்­கைக்கு அமை­யவே இந்த தக­வலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் தெரிவித்ததாவது:

“யுத்தம் முடி­வ­டைந்து ஆறு வரு­டங்கள் பூர்த்­தி­யா­கி­யுள்ள நிலையில் சர்­வ­தேச அளவில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டோர் தொடர்பில் பர­வ­லாக பேசப்­ப­டு­கி­றது. உள்ளூர் ஊட­கங்­களில் மாத்­தி­ர­மின்றி சர்­வ­தேச ஊட­கங்­களும் இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்­து­கி­றது. அத்­தோடு சர்­வ­தேச அரங்­கிற்கு சென்­றாலும் தமிழ் அர­சியல் கைதிகள் தொடர்­பி­லேயே இலங்­கையின் மீது கேள்­வி­யெ­ழுப்­பு­கின்­றனர்.

யுத்தம் முடி­வ­டைந்து ஆறு வரு­டங்கள் பூர்த்­தி­யா­கி­யுள்ள நிலையில் எந்­ந­வொரு விசா­ர­ணை­களும் இன்றி பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் சிறை­யி­லேயே பல வரு­டக்­காலம் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவே குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது. பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் பெரும்­பான்­மை­யானோர் அப்­பா­விகள் என்றே கூறப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் தொடர்பில் பல்­வேறு தர­வுகள் வெளியிடப்­ப­டு­கின்­றன. இதன்­படி பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் குறித்த சட்­டத்தில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவே கூறப்­ப­டு­கின்­றன. ். எனினும் இது தொடர்பில் சட்­டத்­தி­ணைக்­களம் ,சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளினால் உரிய வகையில் பரி­சீ­லனை மேற்­கொண்­டதன் பின்னர் இது தொடர்­பி­லான உண்மை தக­வல்கள் எமக்கு கிடைக்­கப்­பெற்­றுள்­ளன.

இதன்­பி­ர­காரம் தற்­போது பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் 219 பேரே தடுப்பு காவலில் உள்­ளனர். இதன்­படி பயங்­க­ர­வாத சட்­டத்தின் கீழ் உயர் குற்ற பத்­தி­ரத்தின் பிர­காரம் நீதி­மன்­றினால் வழக்கு தொட­ரப்­பட்டு சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டோர் 134 பேரும்,் விசா­ரணை முடி­வ­டை­யாத வழக்­கு­களின் அடிப்­ப­டையில் 60 பேரும் , அதே­போன்று தடுத்து வைத்தல் உத்­த­ரவின் பிர­காரம் மேலும் 25 பேரு­மாக  மொத்தம் 219 பேர் சிறையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். எனினும் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு குற்றம் உறு­திப்­ப­டுத்­தப்ட்­ட­மை­யினால் 54 பேருக்கு தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளன. எனவே இதுவே தற்­போது பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டொரின் உண்­மை­யான தக­வ­லாகும்.

இதே­வேளை பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கைது செய்­யப்­பட்ட 9 பேர் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர். அதே­போன்று குறித்த சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டவர்களில் 45 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பலர் புனர்வாழ்வு பெற்று சென்றுள்ளனர். மேலும் காணாமல்போனோர் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்பின்னர் காணமல் போனோர் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்